தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடா என்பவருக்கு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சர் கொடுத்தார் என அவரை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் அங்கே முறைகேடாக பல வசதிகளை பெற்றதாக தெரியவந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது தர்ஷன் தொடர்ந்து முதுகு வலியால் அவதிப்பட்டு வருவதாகவும் அவருக்கு பெங்களூரில் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்தது. அதேசமயம் பெங்களூருக்கு அல்லாமல் பெல்லாரியிலேயே உள்ள விஜயநகர இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட தர்ஷனுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தர்ஷன் மீண்டும் பெல்லாரி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது குறித்த ஒன்றிரண்டு வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளன. இருப்பினும் தர்ஷனுக்கு அறுவை சிகிச்சை ஒன்றை உடனடியாக செய்தாக வேண்டும் என்றும் அதனால் அவரை பெங்களூரு மருத்துவமனையில் சேர்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் மீண்டும் நீதிமன்றத்தில் அவரது தரப்பிலிருந்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.