தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பாலிவுட்டையும் தாண்டி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த பல வருடங்களாகவே வரவேற்புடன் நடைபெற்று வருகிறது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் இந்த வருடம் அவரது பிசியான ஷெட்யூல் காரணமாக அவர் இதிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக நடிகர் விஜய்சேதுபதி இந்த நிகழ்ச்சியை திறம்பட தொகுத்து வழங்கி சமீபத்தில் தான் இந்த சீசனும் முடிவு பெற்றது. அதேபோலத்தான் கன்னடத்திலும் கடந்த 11 வருடமாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வந்தார் நடிகர் கிச்சா சுதீப்.
இந்த நிகழ்ச்சியை அவர் கையாளும் விதத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனாலும் சினிமாவில் தான் இன்னும் தீவிர கவனம் செலுத்தப் போவதாக இந்த 11வது சீசன் துவங்கும்போதே கூறியிருந்த கிச்சா சுதீப், இந்த சீசனுடன் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விடை பெறுவதாக அறிவித்து இருந்தார். அந்த வகையில் சமீபத்தில் கன்னட பிக்பாஸ் சீசன் 11 நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியிலேயே தான் விடை பெறுவதாக ரசிகர்களிடம் அறிவித்தார் கிச்சா சுதீப். இதைத்தொடர்ந்து அடுத்து யார் இந்த நிகழ்ச்சியை நடத்தப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.