தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வெளியான 'தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிமிஷா சஜயன். அதனைத் தொடர்ந்து இந்த இளம் வயதிலேயே அதிரடி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து சிறந்த நடிகைக்கான பல விருதுகளை பெற்றவர். குறிப்பாக மலையாளத்தில் வெளியான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படம் மூலமாக இன்னும் பிரபலமான நிமிஷா சஜயன் கடந்த 2023ல் தமிழில் நுழைந்து ஒரே வருடத்தில் 'சித்தா' மற்றும் 'ஜிகர்தண்டா டபுளக்ஸ்' என இரண்டு வெற்றி படங்களில் தனது வருகையை அழுத்தமாக பதிவு செய்தார்.
கடந்த வருடம் அருண் விஜய் ஜோடியாக 'மிஷன்: சாப்டர் ஒன்று' படத்தில் நடித்தவர் ஹிந்தியிலும் கடந்த வருடம் வெளியான 'லாண்ட்ராணி' மற்றும் இந்த வருட துவக்கத்தில் வெளியான 'கிரேசி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல ஜோதிகாவுடன் இணைந்து சமீபத்தில் வெளியான 'டப்பா கார்டெல்' என்கிற வெப்சீரிசிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது கொச்சியில் புதிதாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ளார் நிமிஷா சஜயன்.
இந்த வீட்டிற்கு ஜனனி என பெயர் சூட்டியுள்ளார். இந்த நிகழ்வில் மலையாளத் திரையுலகில் அவருக்கு நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருக்கும் நடிகை அனு சித்தாரா, மஞ்சும்மேல் பாய்ஸ் புகழ் இயக்குனர் சிதம்பரம், நடிகர் கணபதி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் அனு சித்தாரா உள்ளிட்ட அங்கே வருகை தந்த சில பெண்களுக்கு நிமிஷா சஜயன், பூச்சூடிவிடும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.