நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
கேரள மக்களில் பெரும்பாலோர் முருக பக்தர்கள். குறிப்பாக பழனி முருக பக்தர்கள். கேரளாவின் அருகில் உள்ள செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி என்ற ஊரில் அமைந்துள்ளது. உயர்ந்த மலைகளை பின்னணியாக கொண்டு குன்றின் மீது அமைந்துள்ள இந்த கோவில் அந்த பகுதியில் மிகவும் பிரபலம்.
இந்த கோவிலுக்கு நேற்று மோகன்லால் திடீரென வருகை தந்தார். நேராக கோவிலுக்கு சென்ற அவர் முருகனை வழிபட்டு தங்கவேலை காணிக்கையாக செலுத்தினார். எம்புரான், தொடரும் படங்களின் வெற்றி, மிகப்பெரிய வசூல் இவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தங்க வேல் காணிக்கையாக வழங்கி உள்ளார்.
'தொடரும்' படத்தின் பாடல் ஒன்றில் 'திருமலை முருகனுக்கு அரோகரா' என்ற வரி இடம் பெற்றிருந்தது. அந்த வரியை கேட்டதுமே திருமலை முருகனுக்கு காணிக்கை செலுத்த வேண்டும் என்று மோகன்லால் பட வெளியீட்டுக்கு முன்பே முடிவு செய்திருந்தாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.