ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? | வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 எனது கனவுத் திட்டம் : இயக்குனர் பொன்ராம் பேட்டி | பிரதமர் மோடியின் வாழ்க்கை படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | டைட்டிலை வைத்து விட்டதால் வேறு வழியின்றி பவன் கல்யாணின் பெயரை மாற்றினேன் : ஓஜி இயக்குனர் சுஜித் | டார்க் மேக்கப்பில் நடித்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராதாரவி | பிளாஷ்பேக் : இப்படியும் நடந்திருக்கு | திட்டமிட்டபடி படத்தை முடித்தோம் : விஜய் மகன் ஜேசன் | மகன் படப்பிடிப்பை பார்க்க வந்த தந்தை மம்முட்டி | தமிழ் சினிமாவில் வெற்றி குறைய நடிகர்களின் தலையீடு தான் காரணம் : திருப்பூர் சுப்ரமணியம் |

மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக மோகன்லால் இருந்தார். ஆனால் கடந்தாண்டு ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாள திரையுலகில் புயல் வீச செய்தது. நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் உறுப்பினர்கள் சிலர் மேலும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்டன. காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டன. சிலர் கைது செய்யப்பட்டார்கள். அதில் குறிப்பாக நடிகர் சித்திக் மிகப்பெரிய அளவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானார்.. இதனைத் தொடர்ந்து அவரை சங்கத்திலிருந்து நீக்குவதற்கு பதிலாக மொத்தமாக அனைத்து உறுப்பினர்களுடனும் ராஜினாமா செய்தார் மோகன்லால். தற்போது அரசு நியமித்துள்ள தற்காலிக குழு ஒன்று நடிகர் சங்க பொறுப்புகளை கவனித்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தலாமா என முடிவு செய்யும் பேச்சுவார்த்தை வரும் ஜூன் 22ம் தேதி நடைபெற இருக்கிறது.
அதேசமயம் மோகன்லால் மீண்டும் தலைவர் பதவிக்கு வர தயாராக இருப்பதாகவும் ஆனால் தேர்தல் நடத்த வேண்டும் என, நடைபெற உள்ள அந்த பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டால் தான் போட்டியிடப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அதேசமயம் அவரையே தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ள சொன்னாலும், இதற்கு முன்பு சங்கத்தில் யார் யார் உறுப்பினர்களாக இருந்தார்களோ அவர்கள் அப்படியே மீண்டும் தொடர வேண்டும் என்பதையும் மோகன்லால் ஒரு முக்கிய நிபந்தனையாக விதித்துள்ளாராம். வரும் ஜூன் 22ம் தேதி தான் இது குறித்த முழு விவரம் தெரியவரும்.