தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மலையாள திரையுலகின் ஜாம்பவான்களான மோகன்லால், மம்முட்டி இருவரும் கிட்டதட்ட 15 வருடங்களுக்குப் பிறகு இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை 'விஸ்வரூபம்' பட எடிட்டரும் மலையாளத்தில் 'டேக் ஆப், மாலிக்' உள்ளிட்ட படங்களை இயக்கியவருமான மகேஷ் நாராயணன் இயக்கி வருகிறார். மேலும் பஹத் பாசில, குஞ்சாக்கோ போபன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படம் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்ட படப்பிடிப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே இலங்கையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் தற்போது எட்டாவது கட்ட படப்பிடிப்பு மீண்டும் இலங்கையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக மோகன்லால் இலங்கை சென்றுள்ளார். அவரை வரவேற்கும் விதமாக இலங்கை சுற்றுலாத்துறை வெளியிட்ட அறிவிப்பில் தவறிப்போய் இன்னும் முறைப்படி அறிவிக்கப்படாத இந்த படத்தின் டைட்டிலை அதில் குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் அறிவிப்புப்படி இந்த படத்திற்கு 'பேட்ரியாட்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுபற்றி அவர்கள் வெளியிட்டுள்ள வரவேற்பு குறிப்பில் ''நடிகர் மோகன்லாலை மீண்டும் இலங்கைக்கு வரவேற்கிறோம். தங்களது படத்திற்கு மிக பொருத்தமான பின்னணி இடமாக இலங்கை இருக்கும் என அதை தேர்வு செய்ததற்கும் சமீப மாதங்களில் இரண்டாவது முறையாக இலங்கைக்கு வருகை தருவதற்கும் அவருக்கு நன்றி'' என்று கூறியுள்ளனர். அது மட்டுமல்ல இந்த முறை படப்பிடிப்பு பத்து நாட்கள் நடக்கும் என்றும் கூட அந்த குறிப்பில் அவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆனால் இதுதான் படத்தின் டைட்டிலா என்பது பற்றி இன்னும் படக்குழுவினர் யாரும் வாய் திறக்கவில்லை.