‛பத்தா' படம்... 'மகளே' பாடல் வெளியீடு : அப்பாமகள் பாசம் கதையா? | 'சிக்மா' டைட்டிலுக்கு விளக்கம் சொன்ன ஜேசன் சஞ்சய் | பிளாஷ்பேக்: தமிழ் படத்தில் ஒரே ஒரு காட்சியில் அறிமுகமான மோகன்லால் | மராத்தி தெரிந்திருந்தும் சஞ்சய் தத் வேண்டுமென்றே பேசாமல் தவிர்த்தாரா ? : வெளிச்சம் போட்ட பழைய வீடியோ | உதவி இயக்குனராக இருந்தவர் ‛ஹனுமான் அன்ஷ்' படத்தின் ஹீரோவாக மாறியது எப்படி? | தம்பி பட புரமோஷனில் கலந்து கொண்டு நடனமாடி அசத்திய விஜய் தேவரகொண்டா | பிளாஷ்பேக்: காணாமல் போன சிவாஜி படம் | சினிமாவில் நடிப்பதற்காக நிஜ சிங்கத்துடன் பயிற்சி எடுக்கும் நடிகர் | இம்மார்டலை தொடந்து புறக்கணிக்கும் கயாடு லோகர் | நிகிலா விமலுக்கு கை கொடுக்குமா தூமகேது ? |

கடந்த 2024-ல் மலையாளத்தில் வெளியான 'பிரேமலு' திரைப்படம் 100 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இயக்குனர் கிரிஷ் ஏ.டி இயக்கிய இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை மமிதா பைஜூ இன்று முன்னணி கதாநாயகி வரிசைக்கு உயர்ந்துள்ளார். தற்போது இதே இயக்குனரின் இயக்கத்தில் மமிதா பைஜூ மற்றும் நிவின்பாலி இணைந்து நடித்துள்ள 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.. இந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 100 கோடி வசூலை எட்டி உள்ளது.
இந்த நிலையில், படத்தின் இணை எழுத்தாளர் கிரண் ஜோசி இந்த படம் குறித்து கூறும்போது, "பிரேமலு படம் எடுப்பதற்கு முன்பே இந்த யோசனை இயக்குனர் கிரிஷின் மனதில் இருந்தது. படத்தின் டைட்டிலும் அப்போதே முடிவு செய்யப்பட்டது. அதுமட்டுமல்ல, கதாநாயகனாக நிவின்பாலிதான் நடிக்க வேண்டும் என்பது வரை தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகுதான் அவர் பிரேமலு படத்தை இயக்கினார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, நான் ஏற்கனவே மனதில் உருவாக்கி வைத்திருந்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படத்தை இயக்க முடிவு செய்தார். தான் நினைத்தது போலவே நிவின்பாலியை கதாநாயகனாக வைத்து, தன்னுடைய வெற்றி நாயகியான மமிதா பைஜூவையே இதிலும் கதாநாயகியாக தேர்வு செய்துவிட்டார்" என்று கூறியுள்ளார்.




