லைட்டா காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் தமிழ் சினிமா ! | தமிழ் சினிமாவில் வசூலைக் குவித்த பார்ட் 2 படங்கள் | டெமாக்ரடிக் சங்கா அமைப்பிலிருந்து விலகுவதாக ரெஜினா அறிவிப்பு | கிங் 100 : தபு பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் சிறப்பு அப்டேட் | ரூ.634 கோடி மோசடி விவகாரத்தில் எனக்கு தொடர்பா....? : ஆதாரமில்லாமல் பேசாதீங்க - ஜனனி அசோக்குமார் | யஷ் குழந்தைகள் பெயர் பின்னால் உள்ள காரணம் | தி டார்க் ஹெவன்' கூட்டணியின் அடுத்த படம் 'தி லாஸ்ட் கேஸ்' | தமிழகத்தில் சினிமா டிக்கெட் கட்டணங்களை உயர்த்த கோரிக்கை | கவனம் பெறாத 'பாக்கெட் நாவல்' இசையமைப்பாளர் மாற்ற அறிவிப்பு | பிளாஷ்பேக் : 63 ஆண்டுகளுக்கு முன்பே அதிரவைத்த படம் |

மகேஷ் பாபு நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் வாரணாசி படம், 2027 ஏப்ரல் 7 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது. படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், தயாரிப்பாளர்கள் படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய வியாபாரத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.
இருப்பினும், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, படத்திற்கு வரும் வர்த்தக சலுகைகளில் படக்குழு முழு திருப்தியடையவில்லை எனக் கூறப்படுகிறது. ஓடிடி தளத்தின் ஆபர் தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பை விடக் குறைவாக இருப்பதாகவும், திரையரங்கம் அல்லாத பிற உரிமைகளிலும் இதுபோன்ற கவலைகள் நிலவுவதாகவும் தெரிகிறது.
இப்படத்தின் பிரம்மாண்ட பட்ஜெட்டைக் கருத்தில் கொண்டு, மதிப்பிட்டுத் தொகையில் விட்டுக்கொடுக்க படக்குழு தயாராக இல்லை. படத்தில் பெருமளவு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதால், வியாபார ஒப்பந்தங்களை முடிவாக்குவதற்கு முன் தயாரிப்பாளர்கள் கவனமான அணுகுமுறையைக் கையாள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் சுகுமாரன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.




