ஜிவி பிரகாஷ் - கவுதம் மேனன் நடிக்கும் '13'; டிசம்பரில் வெளியிட திட்டம் | அர்ஜூன் தாஸ் நடிக்கும் 'ஜான் டோ' நவ.,13ல் ரிலீஸ் | 'கடவுள் தந்த பரிசு' படத்திற்கு ஒரே நாளில் ஆறு பாடல் கம்போஸ்: இளையராஜாவிற்கு நன்றி சொன்ன ராமராஜன் | 'அதிமனோகரம்' படத்துக்கு அதீத எதிர்பார்ப்பு வேண்டாம் ; தயாரிப்பாளர் முன்னெச்சரிக்கை அறிவிப்பு | சைபர் செக்யூரிட்டி கேப்டனாக கேரள காவல்துறையால் நியமிக்கப்பட்ட மம்முட்டி | பாலிவுட் இயக்குநர் டைரக்சனில் மீண்டும் ஒரு ஹாரர் படத்தில் மாதவன் | வாரிசு இயக்குநரின் படத்தில் மோகன்லால் ; கொச்சியில் நடைபெற்ற தொடக்க விழா பூஜை | கன்னட நடிகர் தர்ஷன் வழக்கில் புதிய திருப்பம் ; பல்டி அடித்த சாட்சி | 'டியூட்' இயக்குநரின் புதிய படத்திற்காக 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு - நயன்தாரா? | 'ஜெயிலர் 2'ல் மோகன்லால் காட்சிகள் குறைக்கப்பட்டதில் வருத்தம் தான்: தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் |

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகர்களில் முதன்மையானவர் சிரஞ்சீவி. பல கமர்ஷியல் வெற்றிப் படங்களுக்கு சொந்தக்காரர். தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்தவர். தற்போதும் கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை அவருக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு.
டிவியில் 'மீலோ எவரு கோடீஸ்வரடு' என்ற நிகழ்ச்சியை ஏற்கெனவே 2017ம் ஆண்டில் தொகுத்து வழங்கி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரை பக்கம் வருகிறார். இந்த முறை டிவி அல்ல, ஓடிடி.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் ஆரம்பமாக உள்ள அவரது நிகழ்ச்சிக்கு, 'மெகா வெர்ஸ்' என்ற பெயர் வைத்திருக்கிறார்கள். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார்கள்.
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகர்களான பாலகிருஷ்ணா, ஜெகபதி பாபு ஆகியோர் ஏற்கெனவே ஓடிடியில் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்கள். ஜெகபதி பாபுவின் 'ஜெயம்மு நிஸ்சயம்மு ரா' நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது போய்க் கொண்டிருக்கிறது.
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி ஓடிடி பக்கம் வந்துள்ளது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.




