துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் 'லூசிபர்'. தற்போது இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். மோகன்ராஜா இந்தப்படத்தை இயக்குகிறார்.. தெலுங்கில் எடுப்பதால் ஒரிஜினல் மலையாள கதையில் சில மாற்றங்களை செய்துள்ள மோகன்ராஜா, நடிகர் பிரித்விராஜின் கதாபாத்திரத்தையே நீக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் கதாநாயகியாக அதாவது மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் சுகாசினி அல்லது பிரியாமணி நடிப்பார் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது நயன்தாரா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மோகன்ராஜா இயக்கிய தனி ஒருவன் மற்றும் வேலைக்காரன் ஆகிய இரண்டு படங்களில் நயன்தாரா ஏற்கனவே பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்ல, சிரஞ்சீவியின் முந்தைய படமான 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்திலும் நயன்தாரா தான் கதாநாயகி. அதனால் லூசிபர் ரீமேக்கில் அவரை இணைத்துக்கொண்டதில் ஆச்சர்யம் இல்லை என்றாலும் அந்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்தால் தான் எடுபடும் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.. ஆனால் அதேசமயம் மலையாள ஒரிஜினலில் ஹீரோ மோகன்லாலுக்கு ஜோடி இல்லை. மேலும் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் தான் நயன்தாரா நடிக்கிறார் என்பதால், வில்லனுக்கு மனைவியாகத்தான் அவர் நடிக்க உள்ளார் என்றே தெரிகிறது.. வில்லனாக நடிக்க இருப்பவர் யார் என்பது பற்றி விரைவில் தெரியவரும் என நம்பலாம்.