எம்.எஸ் சுப்புலட்சுமி பயோபிக்கில் சாய்பல்லவி? | வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் |

தெலுங்கில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்த உப்பென்னா படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. அதேசமயம் அல்லரி நரேஷ் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஓரளவு எதிர்பார்ப்புடன் வெளியான நாந்தி என்கிற படமும் மவுத் டாக் மூலமாக பிக் அப் ஆகி டீசன்டான வெற்றியை பெற்றுள்ளது.
தவறுதலாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிரபராதியாக அல்லரி நரேஷும், அவரை மீட்க சட்டப்போராட்டம் நடத்தும் வக்கீலாக வரலட்சுமியும் நடித்திருந்தனர். இந்தப்படத்திற்கு எந்த மொழியிலும் ரீமேக் ஆகும் வேல்யூ இருப்பதாக பேச்சு அடிபட்டு வருகிறது. இந்தநிலையில் இந்தப்படத்தின் அனைத்து மொழி ரீமேக் உரிமையையும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ கைப்பற்றியுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.




