ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது |
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். இவரது யதார்த்தமான நடிப்புக்கு பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் படங்களில் நடித்தார்.
தற்போது பகத் பாசில் சஜிமோன் இயக்கத்தில் மலையன் குஞ்சு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு எர்ணாகுளம் அருகே நடந்து வருகிறது. கதைப்படி பகத் பாசிலின் வீடு மழை வெள்ளத்தில் மூழ்குவது போன்றும், அந்த வீட்டின் கூரை மீது ஏறி நின்று அவர் உதவி கேட்பது போன்றும் காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக நீர் நிரப்பிய பிரமாண்ட தொட்டிக்குள் வீடு செட்போட்டு படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
அந்த காட்சி படமானபோது வீட்டின் கூரை சரிந்து விழுந்தது. அதனுடன் பகத் பாசிலும் சேர்ந்து கீழே விழுந்தார். இதில் அவரது முகம், மூக்கு, கை கால் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக எர்ணாகுளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.