அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக மாறிவிட்ட டொவினோ தாமஸ், தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று 'மின்னல் முரளி'. ஒரு லோக்கல் சூப்பர்மேன் பற்றிய படமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் உட்பட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய பிரபல ஹாலிவுட் சண்டை பயிற்சியாளரான வலாட் ரிம்பர்க் என்பவர் தான் ஆக்சன் காட்சிகளை வடிவமைக்கிறார். இந்தப்படம் இந்தியிலும் சேர்த்து ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிக்காக கேரளாவில் காலடி என்கிற ஊரில் மிகப்பெரிய சர்ச் செட் ஒன்றை வடிவமைத்தனர். ஆனால் கொரோனா தாக்கம் நிலவிய சமயத்தில், அந்தப்பகுதியை சேர்ந்த பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த சிலர் இந்துக்களின் இடத்தில் இந்த சர்ச் செட் அமைக்கப்பட்டிருப்பதாக கூறி அந்த சர்ச்சை இடித்து தள்ளினர். இந்தநிலையில் மீண்டும் மின்னல் முரளி படப்பிடிப்பை துவங்கியுள்ள படக்குழுவினர், தற்போது கர்நாடகாவுக்கு படப்பிடிப்பை மாற்றியுள்ளனர். தற்போது அங்கே நிறுவப்பட்டுள்ள மிகப்பெரிய செட்டில் படப்பிடிப்பு நடைபெறும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.