ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழை தொடர்ந்து, மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த பிப்-14 அன்று துவங்கியது.... இந்த சீசனையும் நடிகர் மோகன்லாலே தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கிடிலம் பைரோஸ் என்கிற போட்டியாளர், சக போட்டியாளரான டிம்பிள் பாய் என்பவர் பற்றி அடிக்கடி கிண்டலாக கருத்துக்களை கூறி வருகிறார். குறிப்பாக டிம்பிள் பாய், தான் சிறுவயதில் கேன்சரால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்த கதையை கூறி அனைவரையும் கண்ணீர் விட வைத்தார்..
ஆனால் கிடிலம் பைரோஸோ, அதுகுறித்து அடிக்கடி விமர்சித்து பேசிவந்தார். இதனால் டிம்பிள் பாயிடம் அவர் தொடர்ந்து இப்படி நடந்துகொள்வது குறித்து, பார்வையாளர்களுக்கு மட்டுமல்ல, நிகழ்ச்சியை நடத்தும் மோகன்லாலுக்கே ஒருகட்டத்தில் கோபம் தலைக்கு மேல் சென்றுவிட்டது.
இந்த சனிக்கிழமை நிகழ்ச்சியில் கிடிலம் பைரோஸிடம் அவர் நடந்துகொண்டது பற்றி மோகன்லால் கேள்வி எழுப்பியபோது அதற்கும் கிடிலம் பைரோஸ் அலட்சியமாக பதில் சொன்னார். இதனால் கோபமான மோகன்லால், டிம்பிள் பாயிடம், கிடிலம் பைரோஸ் இந்த நிகழ்ச்சியில் தொடரக்கூடாது என நீங்கள் விரும்பினால் அவரை வெளியேற்றலாம் என கூறினார்.
ஆனால் டிம்பிள் பாய் பெருந்தன்மையாக “கிடிலம் பைரோஸை வெளியேற்ற விரும்பவில்லை என்றும், என் மன அமைதிக்காக அவரை மன்னித்து விட்டேன், அவர் இந்த வீட்டில் இருக்க வேண்டும்” என்றும் பதில் அளித்தார். இதனால் கிடிலம் பைரோஸ் வெளியேற்றத்தில் இருந்து தப்பித்தார்.,
கடந்த வருடம் இதேபோல் பிக்பாஸ் சீசன்-2வில் 66வது எபிசோடில் வைக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில் போட்டியாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரஜித்குமார் என்பவர் சக போட்டியாளரான ரேஷ்மா ராஜன் என்பவர் முகத்தில் மிளகாய் பேஸ்ட் தடவினார்.. டாஸ்க்கிற்காக செய்ததாக ரஜித்குமார் காரணம் கூறினாலும் இனி அவர் இந்த பிக்பாஸ் வீட்டில் இருக்கக் கூடாது என உறுதியாக நின்றார் ரேஷ்மா ராஜன். இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் ரஜித்குமார்