மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
மலையாள திரையுலகில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதையின் நாயகனாகவும் தன்னை மாற்றிக்கொண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் பஹத் பாசில். அந்த வகையில் தற்போது மாலிக் என்கிற படத்தில் 60 வயது தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நிமிஷா சஜகன் என்பவர் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே பஹத் பாசில் நடித்த தொண்டிமுதலும் திரிக்சாட்சியமும் என்கிற படத்தில் அறிமுகமானவர் என்றாலும் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவில்லை. தற்போது மாலிக் படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக இவரும் வயதான வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த கதாபாத்திரத்தில் தன்னால் நடிக்க முடியுமா என்று நிமிஷா சஜயன் தயங்கியபோது, “உன் மீது நம்பிக்கை இருக்கிறது. முதல் படத்திலேயே அதை நான் கவனித்து விட்டேன். தைரியமாக நடி” என ஊக்கப்படுத்தினாராம் பஹத் பாசில். அதுமட்டுமல்ல ஒரு காட்சியை படமாக்கும்போது பஹத் பாசில் பலமுறை டேக் எடுப்பார் என்றும், ஆனால் அது அந்த காட்சியை விதவிதமாக மேம்படுத்துவதற்காக மட்டுமே என்றும் கூறும் நிமிஷா சஜயன், அவரிடமிருந்து நடிப்பு சம்பந்தமாக நிறைய கற்றுக் கொண்டதாக கூறியுள்ளார்.