23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
பிரபல மலையாள சின்னத்திரை நடிகை அம்பிலி தேவி. மலையாள தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி. பின்னர் சீரியல் ஹீரோயின் ஆனவர். 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்து முடித்திருக்கிறார். சுமதி ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்த விஸ்வதுளசி படத்தில் இளவயது நந்திதா தாஸாக நடித்தவர் அதை தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.
சினிமா ஒளிப்பாதிவாளர் லோவல் என்பவரை 2009ம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் 2018ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதற்கு அடுத்த ஆண்டே மலையாள சீரியல் நடிகர் ஆதித்யன் ஜெயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு அம்பிலி தேவி தனது இரண்டாவது கணவர் மீது புகார் அளித்தார். தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். தற்போது கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாவரா போலீஸ் நிலையத்தில் கணவர் ஆதித்யன் ஜெயன் மீது புகார் கொடுத்துள்ளார். குடும்ப வன்முறை தொடர்பான பிரிவில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆதித்யன் ஜெயனை கைது செய்தனர்.