தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் |
திரிஷ்யம் என்கிற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த ஜீத்து ஜோசப்-மோகன்லால் கூட்டணி, அடுத்ததாக ராம் என்கிற படத்திற்காக இணைந்தனர். வெளிநாட்டில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், கொரோனா முதல் அலை காரணமாக அந்தப்படம் இடையில் நிறுத்தப்பட்டதது. அதன்பிறகு தான் த்ரிஷ்யம்-2 படத்தை துவங்கி குறுகிய காலத்திலேயே அதை எடுத்து முடித்து ஓடிடியில் வெளியிட்டு முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகத்திலும் வெற்றி கண்டனர். பாதியில் நிறுத்தப்பட்ட ராம் படத்தை மீண்டும் தொடர்வதற்கான சூழ்நிலைகள் இல்லாததால் இன்னொரு குறுகிய கால தயாரிப்பாக டுவல்த் மேன் என்ற படத்திற்காக ஜீத்து ஜோசப்பும் மோகன்லாலும் இணைந்தனர்.
கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நாற்பத்தி எட்டு நாட்கள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது நிறைவடைந்துள்ளது. செப்டம்பர் 15 முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் மோகன்லால் கலந்துகொண்டு நடித்துள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தனது சோசியல் மீடியா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தியுள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப். இந்த படம் ஆறு ஆண் கதாபாத்திரங்கள் 6 பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி ஒரே நாளில் நடைபெறும் கதையாக த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.
இதனிடையே இந்த படமும் தியேட்டர் வெளியீட்டை தவிர்த்து ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போதே பிரபல நிறுவனம் ஒன்றும் அதற்கான பேச்சுவார்த்தையை துவங்கிவிட்டதாம்.