2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

வாரிசு என்ற அடையாளத்துடன் அறிமுகமானாலும் கடும் போராட்டங்களுக்கு பின்னர் முன்னணி நடிகராக வளர்ந்திருப்பவர் அருண் விஜய். அவர் தற்போது ஹரி இயக்கத்தில் 'யானை' படத்தில் நடித்து வருகிறார்.
ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்முறையாக ஹரியுடன் அருண் விஜய் கூட்டணி அமைத்துள்ளதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுதவிர இவரின் நடிப்பில் உருவாகியுள்ள அக்னி சிறகுகள், பார்டர், சினம் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருப்பவர் அருண் விஜய். தன்னுடைய படம் தொடர்பாக பல்வேறு தகவல்களை ட்விட்டர் பக்கம் மூலமாகத்தான் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள அருண் விஜய், ட்விட்டர் பக்கத்தில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதுவென்றால் அருண் விஜய், டுவிட்டர் பக்கத்தில் 2 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை நடிகர் அருண் விஜய் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அதோடு இதற்கு காரணமான ரசிகர்களுக்கு நன்றியும் கூறியுள்ளார்.