பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
தெலுங்கு நடிகரான நானி, ‛நான் ஈ' படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானார். தற்போது இவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் உருவாகி உள்ள படம் 'ஷியாம் சிங்கா ராய்'. நாயகிகளாக சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி மற்றும் மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளனர். ராகுல் ரவீந்திரன், முரளி சர்மா, அபினவ் கோமடம், ஜிஷு சென் குப்தா, லீலா சாம்சன், மணீஷ் வாத்வா, பருண் சந்தா உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ராகுல் சங்க்ரித்யன் இயக்கி உள்ளார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுவரை வெளியான நானி படங்களிலேயே மிகவும் அதிக பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது. இதுவரை சொல்லப்படாத ஒரு கதைக் களத்தை இந்த படத்தின் மூலம் கொண்ட வந்துள்ளார் இயக்குனர். அதனால் படம் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச., 24ல் இப்படம் நான்கு மொழிகளில் வெளியாகிறது.