2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

தமிழ், தெலுங்கில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா. ரஜினிகாந்த் ஜோடியாக 'சிவாஜி' படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆன்ட்ரி கோஸ்சீவ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஸ்ரேயா. தங்களுக்கு மகள் பிறந்த தகவலை சில நாட்களுக்கு முன்பு தான் தெரிவித்தனர். மகள் பிறந்த பிறகு தான் அது பற்றிய தகவலை வெளியிட்டார் ஸ்ரேயா. அதுவரை ரகசியமாகவே வைத்திருந்தார்.
தனது மகளுக்கு 'ராதா' எனப் பெயர் வைத்துள்ளார் ஸ்ரேயா. அதற்கு என்ன காரணம் என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். “எனக்கு மகள் பிறந்தது பற்றி அம்மாவிடம் தெரிவித்ததும், அவர் 'ஓ ராதா ராணி வருகிறாள்” என்றார். எனது அம்மாவின் மகிழ்ச்சி பற்றி கணவரும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
அதன்பின் எனது கணவர், “ஏன், உனது அம்மா நம் மகளை ரஷியப் பெயரில் அழைக்கிறார் என்று கேட்டார். அதற்கு நான் 'என்ன சொல்றீங்க,” எனக் கேட்டேன். “ராதா என்றால் ரஷிய மொழியில் 'மகிழ்ச்சி' என்று அர்த்தம்” என அவர் பதிலளித்தார். எனவே, தான் நான் எனது மகளுக்கு 'ராதா' எனப் பெயர் வைத்தேன்.
அவளது முழு பெயர் 'ராதா சரண் கோஸ்சீவ். அவளை நான்தான் சுமந்தேன், எனவே என்னுடைய பெயரையும் சேர்த்து அவளுக்குப் பெயர் வைக்க வேண்டும் என கணவர் விரும்பினார். ராதா என்றால் ரஷிய மொழியிலும் மகிழ்ச்சி என்று அர்த்தம், சமஸ்கிருதத்திலும் மகிழ்ச்சி என்று அர்த்தம். எனவே, எனது மகளின் இரண்டு தாத்தா, பாட்டிக்களுக்கும் அந்தப் பெயர் பிடித்துவிட்டது,” என்றார் ஸ்ரேயா.