ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் |

கரண், வடிவேலு, நடித்த காத்தவராயன், கதிர், ஹனி ரோஸ் நடித்த காந்தர்வன், கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்த இ பி கோ 302 படங்களுக்கு பிறகு சலங்கை துரை இயக்கும் படம் கடத்தல். எம்.ஆர்.தாமோதர், விதிஷா, ரியா, சிங்கம் புலி, நிழல்கள் ரவி உள்பட பலர் நடிக்கிறார்கள். எம்.வி.பன்னீ்ர் செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார், தனசீலன் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் சலங்கை துரை கூறியதாவது: ஒரு முக்கியமான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட அதிரடி திருப்பங்களுடன் கூடிய ஆக்சன் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. எப்போது நடந்த கடத்தல், எங்கே நடந்த கடத்தல், யார் நடத்திய கடத்தல் என்று படம் வெளியான பிறகு அனைவராலும் பரபரப்பாக பேசப்படும். சென்னையில் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.என்றார்.




