ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

குற்றம் 23 படத்திற்கு பிறகு அறிவழகனும், அருண் விஜயும் இணைந்துள்ள படம் பார்டர். ரெஜினா, ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து வெளியீட்டக்கு தயாராகி விட்டது. நவம்பர் 19ம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படம் திருப்திகரமாக முடிந்தமைக்காக அருண் விஜய் படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டவர்களுக்கு ஐ பேட் பரிசளித்துள்ளார்.
படம் குறித்து அருண் விஜய் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இது படத்தில் உங்கள் அற்புதமான பணிக்கான ஒரு அன்பின் அடையாளம். இந்த அற்புதமான கதையை என்னிடம் கொடுத்து நடிக்க வைத்த இயக்குநர் அறிவழகனுக்கு நன்றிகள். இந்தக் குழுவின் மீது நம்பிக்கை வைத்த ஆல் இன் பிக்சர்ஸுக்கும் நன்றி. பார்டர் என்னுடைய மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகவும், என் சினிமா வாழ்வில் ஒரு மைல்கல்லாகவும் இருக்கும். என்று எழுதியிருக்கிறார்.