தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

அனுராக் சிங் இயக்கத்தில் சன்னி தியோல், வருண் தவான், தில்ஜித் தோசன்ஜ், அஹான் ஷெட்டி, சோனம் பஜ்வா உள்ளிட்டோர் நடிப்பில் ஹிந்தியில் உருவாகி வரும் படம் ‛பார்டர் 2'. 1971ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இந்த போரில் பரம்வீர் சக்ரா விருது பெற்ற மறைந்த இந்திய ராணுவ கர்னல் ஹோஷியார் சிங் தஹியா முக்கிய பங்காற்றினார். இவரது வேடத்தில் வருண் தவான் நடித்துள்ளார்.
தற்போது பார்டர் 2 படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசரில் வருண் தவானின் நடிப்பை பார்த்து ஹோஷியார் சிங் தஹியா குடும்பத்தினர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
கர்னல் சுஷில் குமார் தஹியா, தனது குடும்பத்தினருடன் இணைந்து தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், நாங்கள் இப்போதுதான் 'பார்டர் 2' டீசரைப் பார்த்தோம். வருண் தவான் நிச்சயமாக அந்தக் கதாபாத்திரத்திற்கு நீதி செய்துள்ளார். டீசர் மிகவும் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது. எங்கள் பாரம்பரியம் இத்தகைய உணர்வுடனும் நேர்மையுடனும் சொல்லப்படுவதைக் காண்பது எனக்கும் என் குடும்பத்திற்கும் உண்மையிலேயே ஒரு சிறப்பு வாய்ந்த தருணம். படத்தை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளோம். உங்களுக்கும் முழு படக்குழுவினருக்கும் படத்திற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
'பார்டர் 2' திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 23ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.




