துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழ் ரசிகர்களுக்கு சற்று பூசினாற்போல் இருக்கும் நடிகைகளை பிடிக்கும். குஷ்பு முதல் ஹன்சிகா வரை உதாரணம் காட்டலாம். அப்படி சற்று குண்டான தோற்றத்துடன் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. தெலுங்கில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டியில் அறிமுகமானவர் தமிழில் 100 % காதல் மூலம் வந்தார். கொரில்லா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர், அதன் பின் தன் தோற்றத்தை ஒல்லியாக மாற்றினார்.
அர்ஜூன் ரெட்டி தவிர, அவர் நடிப்பில் வெளியான எந்த திரைப்படமும் சரியாக ஓடவில்லை. தற்போது இந்தியில் ஒரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார். அதனால் பட வாய்ப்புகளை பெற மற்ற நடிகைகள் போன்று கிளாமர் ரூட்டில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கிளாமர் தூக்கலான புகைப்படங்களை ஷாலினி பாண்டே வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.