படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

நடிகர் ரஜினிகாந்த்திற்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. டில்லியில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வழங்கினார். இதையொட்டி கவர்னர், முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இளைஞர்களை கவர்ந்திழுத்த பண்பாளர் - கவர்னர்
கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‛‛இந்திய திரைத்துறையில் தங்களின் அளப்பரிய பங்களிப்பிற்காக இந்தியத் திரைப்பட உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்காக இந்திய மக்களின் சார்பாகவும், என் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாள், திரைப்படங்களை விரும்பும் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதொரு பொன்னாள் ஆகும். இந்தியத் திரை உலகிற்கான தங்களின் வியத்தகு பங்களிப்புடன் பொது வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்விலும் தங்களின் தலைசிறந்த பண்பினால் நம் நாட்டு இளைஞர்களைக் கவர்ந்திழுத்த பண்பாளர் நீங்கள். நீங்கள் நல்ல உடல் நலத்தோடு ஆண்டுகள் பல நீடூழி வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
திரைவானின் சூரியன் ரஜினி - முதல்வர்
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் வாழ்த்து செய்தியில், ‛‛திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறும் அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நெஞ்சம்நிறைய வாழ்த்துகள். திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்!'' என பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பெருமை - நாசர்
நடிகர் நாசர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‛‛அபூர்வ ராகங்கள் படம் மூலம் நடிகராக அறிமுகமாகி 46 வருட திரைப்பயணத்தில், எண்ணற்ற பல சாதனைகள் படைத்து, உலகம் முழுக்க ரசிகர்களால் கொண்டாடபடுபவர் ரஜினிகாந்த். அவர் ஆற்றிய கலைப்பணிகளுக்கு, இந்திய அரசின் உயரிய கலைத்துறை விருதான தாதா சாகேப் பால்கே விருதினை அவர் பெறுவது, இந்திய மற்றும் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பெருமையாக கருதுகிறோம். அவரது கலைப்பயணம் மேலும் தொடர அனைத்து நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மற்றும் தேசிய விருது பெற்ற கலைஞர்களான சிறந்த நடிகர் தனுஷ் ( அசுரன் ), சிறந்த துணை நடிகர் விஜய்சேதுபதி ( சூப்பர் டீலக்ஸ் ), ஜூரி விருது பார்த்திபன் ( ஒத்த செருப்பு ), சிறந்த தமிழ் படம் விருது வென்ற இயக்குநர் வெற்றிமாறன் ( அசுரன் ), சிறந்த இசையமைப்பாளர் டி.இமான் ( விஸ்வாசம்-கண்ணான கண்ணே..), சிறந்த ஒலிக்கலவை ரசூல் பூக்குட்டி ( ஒத்த செருப்பு ), சிறந்த குழந்தை நட்சத்திரம் நாக விஷால் ( கே.டி (எ) கருப்புதுரை ) ஆகியோருக்கு அனைத்து நடிகர் நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.