மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
கொரோனா ஊரடங்கு சமயத்தில் பாதியில் நின்றிருந்த தனது படங்களின் படப்பிடிப்புகளை ஒவ்வொன்றாக முடித்து வருகிறார் நடிகர் துல்கர் சல்மான்.. அந்தவகையில் மலையாளத்தில் குறூப், சல்யூட் மற்றும் தமிழில் ஹே ஷினாமிகா ஆகிய படங்களை முடித்துவிட்ட துல்கர் சல்மான், இந்தியில் சுப் என்கிற படத்தில் நடித்து வந்தார். தற்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பும் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
ஏற்கனவே கார்வான், தி சோயா பேக்டர் என இரண்டு இந்திப்படங்களில் நடித்துள்ள துல்கருக்கு இது மூன்றாவது படம். இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து 'பா', 'சீனிகம்' ஷமிதாப் என வித்தியாசமான படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குனர் பால்கி தான் இந்தப்படத்தை இயகியுளார். பாலிவுட் நடிகர் சன்னி தியோல் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.