சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கன்னட முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராகுமார் நேற்று முன்தினம் (அக்.,29) மாரடைப்பால் காலமான துயர நிகழ்வு இந்திய திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இன்று அவரது இறுதிச்சடங்குகள் நடந்த நிலையில் அவருடன் பணியாற்றிய திரையுலக பிரபலங்கள் அவர் குறித்த தங்களது இனிய நினைவுகளை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் அவருக்குள்ளும் இயக்குனராகும் கனவு இருந்திருக்கிறது என்பதும் அது நிறைவேறாமலேயே அவர் இவ்வுலகை விட்டு சென்றுள்ளார் என்பதும் நடிகை ரம்யா மூலம் தற்போது தெரியவந்துள்ளது.
புனித் ராஜ்குமார் குறித்து ரம்யா கூறும்போது, “என்னுடைய அறிமுக படமே புனித்துடன் தான் அமைந்தது. நானும் அவரும் மூன்று படங்களில் இணைந்து நடித்துள்ளோம். நடிகைகளுக்கு கேரவன் கொடுக்கப்படாத அந்த காலகட்டத்தில் அவருடைய கேரவனை எனக்கு பயன்படுத்திக்கொள்ள கொடுத்துவிட்டு, அவர் படக்குழுவினருடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பார்.
தன்னுடைய அண்ணன் சிவராஜ்குமாரை வைத்து ஒரு படம் இயக்கவேண்டும் என்றும் அதில் நான் கதாநாயகியாக நடிக்கவேண்டும் என்றும் அடிக்கடி சொல்வார். அதற்கு முன்னதாக எங்கள் இருவரையும் வைத்து எப்படி இசை ஆல்பம் ஒன்றை எடுக்கப்போகிறேன் என்றெல்லாம் சுவாரஸ்யமாக விளக்குவார். அப்படிப்பட்ட ஒரு நபரை, இப்படியெல்லாம் இருந்தார் என கடந்த காலத்தை பயன்படுத்தி சொல்வதே வேதனையாக இருக்கிறது. அவருடைய மறைவு அவரது குடும்பத்திற்கு, குறிப்பாக அவரது மகளுக்கு எந்த அளவுக்கு இழப்பு என்பதை என்னால் உணர முடிகிறது” என கூறியுள்ளார் ரம்யா.