‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு |
பெங்களூரு : மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்கள் மூலம், நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.
கன்னட முன்னணி சினிமா நடிகர் புனித் ராஜ்குமார் அக்டோபர் 29ல் மாரடைப்பால் காலமானார். அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என லட்சக்கணக்கான பேர் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நேற்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. புனித் தனது இரு கண்களை தானமாக வழங்கி இருந்தார்.
![]() |
இது குறித்து புஜங்கஷெட்டி நேற்று கூறியதாவது: இரண்டு கண்கள், இருவருக்கு தான் பொருத்தப்படும். ஆனால், புனித்தின் கண்கள் நவீன தொழில்நுட்பம் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நால்வருக்கு பொருத்தியுள்ளோம். அதாவது ஒவ்வொரு கண்ணையும் இரண்டாக வெட்டினோம். கார்னியா எனப்படும் விழிப்படலம் முன்பகுதி, பின்பகுதியாக தனி தனியாக பிரிக்கப்பட்டது. முன் பகுதி விழிப்படலம் இருவருக்கும்; பின் பகுதி விழிப்படலம் இருவருக்கும் பொருத்தினோம்.
![]() |