போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித ராஜ்குமார் கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பால் காலமானார். குறுகிய வயதில் இவரது அகால மரணம் அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இவருடன் பணியாற்றிய ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் அவர் ஒரு அற்புதமான மனிதர் என சிலாகித்து கூறி வருகிறார்கள். அந்தவகையில் அவருடன் கடந்த 2019ல் வெளியான 'நடசார்வபோவ்மா' என்கிற படத்தில் இணைந்து நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன், அவரது மறைவு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அந்தப்படத்தில் புனித் - ககன் ஆகவும், அனுபமா - சுருதி ஆகவும் நடித்திருந்தனர். அதை மனதில் வைத்து, “அப்பு சார். ஸ்ருதி எப்போதுமே ககனை மிஸ் பண்ணுகிறாள்... ஆனால் அனுபமா ஒரு நல்ல அன்பான, மரியாதைக்குரிய, அர்ப்பணிவு உணர்வு கொண்ட ஒரு நல்ல மனிதரை இனி மிஸ் பண்ணுவாள்.. உங்களுடைய புன்னகையை எப்படி மறக்க முடியும்.. இன்னும் இந்த உண்மையை ஏற்க மனம் மறுக்கிறது” என கூறியுள்ள அனுபமா, அந்தப்படத்தில் தனக்கு பிடித்த காட்சி ஒன்றையும் அதில் பகிர்ந்துள்ளார்.