தமிழ் இயக்குனருடன் இணைந்த சிவராஜ்குமார் | 171வது படத்தில் நாயகனாக நடிக்கும் சரத்குமார் | 'கட்டா குஸ்தி 2'வை பாராட்டிய ரஜினி | பிளாஷ்பேக்: வாசு பெயருக்கு முன்னால் 'அல்வா' வந்தது எப்படி? | 6 மாதங்களுக்கு பின்பு வெளியாகும் முதல்வர் விஜயின் 'ஜனநாயகன்': ஜூலை 23ல் ரிலீஸ் | காமராஜ் படத்தை நாட்டுடமை ஆக்குங்கள் : முதல்வருக்கு வேண்டுகோள் | அஜித் 64 : தயாரிப்பாளராகும் மனைவி ஷாலினி ? | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் டைட்டிலில் நடித்த சிவாஜி | அல்லு அர்ஜூன், பசில் ஜோசப் புதிய கூட்டணி ? | வெளியீடு வெளிச்சத்திற்காக காத்திருக்கும் படங்கள் : கதவு திறக்குமா? |

கொரோனா இரண்டாவது அலை தாக்கம் குறைந்துள்ள நிலையில், பாலிவுட் சினிமா மறுபடியும் தியேட்டர்களில் தங்களது வெளியீட்டை துவங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது முதல் பெரிய படமாக ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள சூர்யவன்ஷி என்கிற படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டியுள்ள இயக்குனர் ராஜமவுலி.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ராஜமவுலி கூறும்போது, சூர்யவன்ஷி படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள், இந்த அசாதாரண சூழலில் கிட்டத்தட்ட ஒரு வருடம் படத்தை ரிலீஸ் செய்யாமல் காத்திருந்து தியேட்டர்கள் திறந்த பின்பே ரிலீஸ் செய்துள்ள தயாரிப்பாளரின் மன உறுதியை பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார். இந்த படத்தை ரிலையன்ஸ் என்டர்டைன்மெண்ட் சார்பில் ரோஹித் ஷெட்டி தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.