அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
லைகா நிறுவனம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. கடந்த வருடம் நிகழ்ந்த கிரேன் விபத்திற்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நடக்கவில்லை. தயாரிப்பு நிறுவனத்திற்கும், ஷங்கருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்த போது வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதன்படி இந்தியன் 2 படத்தை முன்னுரிமை கொடுத்து ஷங்கர் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தயாரிப்பு தரப்புக்கும், ஷங்கருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்த இந்தியன்-2 படப்பிடிப்பை துவங்க ஷங்கர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
தற்போது ஷங்கர் தான் இயக்கி வரும் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். அதன் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும் டிசம்பர் 16 அல்லது 17-ம் தேதியில் இந்தியன் 2 படத்தை ஆரம்பிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்குள் கமல்ஹாசனும் விக்ரம் படத்தில் நடித்து முடித்துவிடுவாராம்.