ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகை ஊர்வசி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து கிட்டத்தட்ட 45 வருடங்கள் ஆகிவிட்டது. தென்னிந்திய மொழிகளில் இதுவரை 699 படங்களில் நடித்துள்ள ஊர்வசியின் 700-வது படமாக உருவாகிறது அப்பத்தா. இதில் அப்பத்தாவாக வயதான கேரக்டரில் நடிக்கிறார் ஊர்வசி. இயக்குனர் பிரியதர்ஷன் இந்தப்படத்தை இயக்குகிறார்.
இதற்குமுன் 1993ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் மிதுனம் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்த ஊர்வசி, சரியாக 28 வருடங்கள் கழித்து அவரது டைரக்சனில் மீண்டும் நடிக்கிறார். மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்கிற பிரமாண்ட வரலாற்று படத்தை இயக்கிவிட்டு அப்பத்தா என்கிற சிறிய படத்தை பிரியதர்ஷன் இயக்குவது ஆச்சர்யமான விஷயம்.