சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
சூர்யா - பாண்டிராஜ் கூட்டணி பசங்க 2 படத்தை அடுத்து இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பிப்ரவரி 4 ஆம் தேதி படம் திரைக்கு வருவது உறுதியாகி விட்டது. பிரியங்கா மோகன், திவ்யா துரைசாமி, சத்யராஜ், சரண்யா உள்பட பலர் நடிக்க, டி.இமான் இசையமைக்கிறார் .
இந்த நிலையில் நேற்று எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் குறித்து ஒரு அப்டேட் வெளியிட்டது அப்படக்குழு. அந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் பெயரும் இடம் பெற்றிருந்தது. இதற்கு காரணம் இந்த படத்தில் ஒரு பாடல் எழுதி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்கு முன்பு கோலமாவு கோகிலா, டாக்டர் என சில படங்களுக்கு பாடல் எழுதியுள்ள சிவகார்த்திகேயன், சூர்யாவின் இந்த படத்திற்கும் ஒரு பாடல் எழுதி இருக்கிறார். விரைவில் இந்த பாடல் வெளியிடப்பட உள்ளது.
பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் அதன்பிறகு அவர் இயக்கத்தில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.