டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ‛மாநாடு'. கொரோனா உள்ளிட்ட பல பிரச்னைகளை தாண்டி வளர்ந்து வந்த இந்தப்படம் நவ., 25ல் திரைக்கு வர உள்ளது. படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக உள்ளனர். டைம் லூப்பை மையமாக வைத்து இந்த கதை உருவாகி உள்ளது. ஏற்கனவே டீசர், டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பொது இடங்களான தியேட்டர்கள், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி என்ற புதிய விதிமுறையை தமிழக சுகாதாரத் துறை அமல்படுத்தி உள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
‛‛உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்கு தான் முதல்முறை. அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.