பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
செந்தூர் பிலிம் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள ராஜ வம்சம் படத்தை சுந்தர்.சி உதவியாளர் கதிர்வேலு இயக்கியுள்ளார். சசிகுமார், நிக்கி கல்ராணி, ராதா ரவி, தம்பி ராமைய்யா, விஜயகுமார், சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, யோகிபாபு, கும்கி அஸ்வின், ஆடம்ஸ், சரவணா சக்தி, மணி சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ் கபூர், தாஸ், நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ் , சமர், ரேகா, சுமித்ரா , நிரோஷா, சந்தான லட்சுமி, சசிகலா, யமுனா, மணி சந்தனா, மணி மேகலை, மீரா, லாவண்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா, தீபா உள்பட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சிஎஸ் இசை அமைத்துள்ளார். வருகிற 26ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தில் நடித்திருப்பது பற்றி நிக்கி கல்ராணி கூறியதாவது:
ராஜ வம்சம் படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு கூட்டுக் குடும்பத்தில் வாழும் வாழ்க்கை கிடைக்கவில்லை. ஆனால் இப்படத்தில் ஒரு பெரிய வீட்டில் உண்மையாகவே ஒரு கூட்டு குடும்பத்தில் வாழ்ந்தது போல் இருக்கிறது. சசிகுமார் நடிப்பின் மூலம் பல அனுபவங்களை கற்றுக் கொடுத்தார். இப்படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என கதிர் பிடிவாதமாக இருந்தார். அப்பொழுது தான் இந்த கூட்டு குடும்பம் சம்பந்தப்பட்ட படத்தை குடும்பம் குடும்பமாக மக்கள் ரசிப்பார்கள் என எண்ணினார். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.