மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
சூர்யா தயாரித்து நடித்து வெளியான ஜெய்பீம் படம் மிகப்பெரிய சர்ச்சைகளில் சிக்கியது. இப்போதுவரை அந்த பிரச்சினை ஓய்ந்தபாடில்லை. இந்த நேரத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான சிம்புவின் மாநாடு படமும் தற்போது ஒரு சிக்கலில் சிக்கியுள் ளது.
அதாவது, ஜெய்பீம் படத்தில் இடம்பெற்ற காலண்டர் காட்சிக்கு எதிராக பாமகவினர் கொடி பிடித்த நிலையில், தற்போது மாநாடு படத்திற்கு எதிராக பாஜகவினர் கொடி பிடித்துள்ளனர். மாநாடு படத்தில் இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளன. அதனால் தமிழக அரசு தலையிட்டு அதுபோன்ற காட்சிகளை நீக்க வேண்டும் என்று பா.ஜ., சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் வேலூர் இப்ராஹிம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
அதோடு, மாநாடு படத்தில், அமெக்காவில் குண்டு வெடிச்சா பயங்கரவாதி என்கிறோம். இந்தியாவில் வெடித்தால் முஸ்லீம் பயங்கரவாதி என்கிறோம். பயங்கரவாதிக்கு ஏது சாதி மதம் என்று இஸ்லாமியராக நடித்துள்ள சிம்பு பேசுவதையும் குறிப்பிட்டுள்ள பா.ஜ.,வினர், அப்படத்தின் கடைசி காட்சியில் ரயில் நிலைய பெயர் பலகையில் ஹிந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டிருப்பதை காண்பிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் மாநாடு படத்திற்கு எந்தமாதிரியான ரியாக்சனை ஏற்படுத்தப்போகிறதோ? பொறுத்திருந்து பார்ப்போம்.