இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
தமிழ் மற்றும் மலையாள சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறவர் பிரவீனா. தமிழில் பிரியமானவளே, மகராசி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார், தற்போது ராஜா ராணி சீசன் 2ல் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இயங்குகிறவர்.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை மார்பிங் செய்து சிலர் பகிர்ந்த வருவதாக கேரள ஏடிஜிபி மனோஜ் ஆபிரஹாமிடம் புகார் செய்தார். இதை தொடர்ந்து விசாரணை நடத்திய திருவனந்தபுரம் போலீசார் பிரவீனாவின் படத்தை ஆபாசமாக வெளியிட்டதாக கன்னியாகுமரியை சேர்ந்த மணிகண்டன், பாக்யராஜ் என்ற இரு இளைஞர்களை கைது செய்தனர். இருவரும் திருவனந்தபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து பிரவீனா கூறியிருப்பதாவது: என்னை பின் தொடர்பவர்களுக்கு என் அன்பான வணக்கம். கடந்த சில மாதங்களாக, தெரியாத சமூக வலைதள கணக்கு ஒன்று என்னைப் போல் நடித்து, என்னை பின்தொடரும் அனைவருக்கும் தேவையற்ற செய்திகளையும் படங்களையும் அனுப்பி வருகிறார்கள் . என் குடும்பத்தினர் மற்றும் என்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுக்கும் தேவையில்லாத சில புகைப்படங்களை அனுப்பியுள்ளனர். பலமுறை நான் எச்சரித்தும் பலனில்லை.
எனவே, நான் அதிகாரப்பூர்வமாக சைபர் போலீசில் புகார் செய்துள்ளேன். தற்போது என்னை பின்தொடர்பவர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். என்னைப் போல் நடிக்கும் அல்லது என் பெயரில் தேவையற்ற செய்திகளை அனுப்புகிறவர்களை நீக்கி விடுங்கள் என்று அவர் கூறியுள்ளார். மேலும் கைது நடவடிக்கையை தொடர்ந்து, சம்பந்தபட்டவர்களை கைது செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலும் புகார் செய்ய முன்வருவதில்லை. இது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. பாதிக்கப்பட்ட அனைவரும் புகார் அளிக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.