நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் ரகுமான். இவரது மனைவி மெஹர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினரான ரகுமான் - மெஹர் தம்பதியரின் மூத்த மகள் ருஷ்டா - அல்தாப் நவாப் ஆகியோரின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அப்போது மணமக்களுக்கு பசுமை கூடை மரக்கன்றுகளை பரிசாக முதல்வர் வழங்கினார். முதல்வரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நடிகர் ரகுமான் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து நடிகர் மோகன்லால், சுசித்ரா மோகன்லால் , சரத்குமார், ராதிகா, விக்ரம், ஜாக்கி ஷெராப், இயக்குனர் மணிரத்னம், சுஹாசினி, சுந்தர் சி, பானு சந்தர், அம்பிகா, சொப்னா, மேனகா சுரேஷ், லிசி, பார்வதி ஜெயராம், ஷோபனா, பூனம் தில்லான், நதியா, சுவேதா மேனன், பாக்யராஜ், பூர்ணிமா, வினித் , காளிதாஸ், தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி உள்ளிட்ட திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.