மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் அடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு கதாநாயகி பூஜா ஹெக்டே. சில நாட்களுக்கு முன்பு பூஜா ஹெக்டே தன்னுடைய படப்பிடிப்பை நிறைவு செய்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் விஜய்யும் பீஸ்ட் படத்துக்கான படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டார். இருந்தாலும் இன்னும் படப்பிடிப்பு முழுமையடையவில்லை. சில நாட்களுக்கு மற்றவர்கள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. அத்துடன் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. அதன் பின்னர் உடனடியாக டப்பிங்கை தொடங்கி கிறிஸ்துமஸ் நாளுக்குள் விஜய் தனது டப்பிங் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.
ஜனவரி முதல் வாரத்தில் அடுத்து நடிக்க இருக்கும் வம்சி படத்துக்கான லுக் டெஸ்ட் செய்ய திட்டமிட்டுள்ளார். வம்சி படம் பிப்ரவரி மாதம் தொடங்கி ஜூன் மாதத்திற்குள் முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இதை விரும்புகிறார். அந்த வகையில் அடுத்த ஆண்டு விஜய்யின் இரண்டு படங்கள் ரிலீஸாக திட்டமிட்டுள்ளார்.