தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? |

அலைபாயுதே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கார்த்திக்குமார். தொடர்ந்து பொய் சொல்ல போறோம், தெய்வ திருமகள், வெப்பம், யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் மேடை காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
கார்த்திகுமார், ரேடியோ ஜாக்கியும், பாடகியுமான சுசித்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சுசித்ரா பெயரில் வெளியான சில அந்தரங்க படங்கள், அவருக்கு ஏற்பட்ட மனநல பிரச்சினைகள் காரணமாக கடந்த 2017ல் சுசித்ராவை விவாகரத்து செய்தார் கார்த்திக் குமார்.
கார்த்திக் குமார் தற்போது நடிகை அமிர்தா சீனிவாசனை 2வது திருமணம் செய்துள்ளார். மேயாத மான், தேவ் உள்ளிட்ட சில படங்களில் அமிர்தா நடித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்த திருமணவிழாவில் நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.