சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் ஐந்து மொழிகளில் வெளியான படம் 'புஷ்பா'. இப்படத்தில் 'ஓ சொல்றியா மாமா…' என்ற ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனமாடியுள்ளார் சமந்தா. அப்பாடல் அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது.
படத்தைப் பார்த்து சமந்தா கூறுகையில், “இது அல்லு அர்ஜுனைப் பாராட்டும் ஒரு பதிவு. ஒவ்வொரு நொடியும் உங்களை கவர்ந்திழுக்கும் ஒரு நடிப்பு. ஒரு நடிகர் எப்போதும் சிறப்பாக செயல்படும் போது அவரை விட்டு விலகிப் பார்ப்பது முடியாத ஒன்று. 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன் எனக்கு அப்படித்தான் தெரிகிறார். பேச்சு நடை, தோளை இறக்கி நடக்கும் நடை… அச்சோ... நிஜமாகவே பிரமிப்பு, மிவும் உத்வேகமான ஒன்று,” எனப் பாராட்டியுள்ளார்.
சமந்தாவின் பாராட்டிற்கு, “மனப்பூர்வமான பாராட்டுக்களுக்கு நன்றி டியர், தொட்டுவிட்டீர்கள்,” என அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்துள்ளார்.