2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' |

ஆலியாபட் நடித்து வரும் படம் கங்குபாய் கதியாவாடி. மும்பையின் பிரபல பெண் தாதா கங்குபாயின் வாழ்க்கை கதை. இதில் ஆலியா பட் கங்குபாயாக நடிக்கிறார். அவருடன் அஜய்தேவ்கன் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்குகிறார்.
இந்த படம் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் 72 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி கூறியதாவது: கங்குபாய் கத்தியவாடியின் கதை என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. நானும் எனது குழுவினரும் இந்த கனவை சாத்தியமாக்குவதற்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளோம். மதிப்புமிக்க பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் எங்கள் படத்தைக் காண்பிப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். என்கிறார்.
சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் டாக்டர் ஜெயந்திலால் கடா பென் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இப்படம் பிப்ரவரி 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.