தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் | 50 ஆண்டு சினிமா பயணம் : ரஜினிக்கு அந்த ஒரு ஏக்கம் மட்டுமே...! | ராம் சரணின் அலைப்பேசி எண்ணை அவர் மனைவி எப்படி பதிந்து வைத்துள்ளார் தெரியுமா? |
இசைஞானி இளையராஜாவின் மயக்கும் இசையில் 1417-வது படமாக உருவாகி வருகிறது "நினைவெல்லாம் நீயடா". லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார். கதாநாயகனாக பிரஜனும், கதாநாயகியாக, வழக்கு எண் 18 /9 மனிஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார். இவர்களுடன் மாஸ்டர் பட புகழ் ரோகித், யுவஸ்ரீ, மனோபாலா, மதுமிதா, பி.எல்.தேனப்படன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
பள்ளிக்கூட காதலின் ஆழத்தையும் தியாகத்தையும் அழகியலோடு சொல்ல வருகிறது "நினைவெல்லாம் நீயடா". இந்த படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
மனிஷா கூறுகையில், "நான் நடித்த வழக்கு எண்18/9, ஒரு குப்பை கதை போன்ற படங்கள் ரசிகர்களிடம் எனக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தன. அந்த வரிசையில் இந்த படம் என் நடிப்புத் திறமைக்கும் நடன திறமைக்கும் தீனி போடும் படமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தின் கதையை இயக்குனர் ஆதிராஜன் சொன்ன உடனேயே பிடித்து விட்டது. அதற்கு காரணம்.... ஒரே கேரக்டருக்குள் பலவிதமான கேரக்டர்கள் ஒளிந்திருக்கும் வித்தியாசமான வேடம் இது. இதுவரை இப்படி ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நான் நடித்ததில்லை. நிஜமாகவே எனக்கு சவாலான வேடம் இது. அத்துடன் இளையராஜா சார் இசையில் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்ற என்னுடைய கனவும் இந்த படத்தில் நிறைவேறுகிறது. கண்டிப்பாக இந்த படத்தை காதலர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள் என்று நம்புகிறேன். "நினைவெல்லாம் நீயடா" ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடிக்கும்" என்றார்.