ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு |

தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் நடிகை லக்ஷ்மி மஞ்சு. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு தயாரிப்பாளராகவும், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழித்திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மறந்தேன் மன்னித்தேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து மணிரத்னத்தின் கடல், ராதாமோகன் இயக்கிய காற்றின் மொழி படங்களில் நடித்தார்.
தற்போது, மோகன்லாலுடன் 'மான்ஸ்டர்' என்ற மலையாளப் படத்திலும், பிக் பாஸ் தர்ஷன் நாயகனாக நடிக்கும் படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்து வருகிறார். அதிகமான தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமா இருக்கிறேன் என்கிறார் லட்சுமி மஞ்சு.
அவர் மேலும் கூறியதாவது: இதுவரை எந்த ஒரு தமிழ்ப் பட வாய்ப்பையும் நான் நிராகரித்ததில்லை. அதேபோல், இப்படி தான் நடிப்பேன், இப்படிப்பட்ட வேடத்தில் தான் நடிப்பேன், என்று சொன்னதும் இல்லை. நல்ல வேடமாக இருந்தால், எந்த வேடமாக இருந்தாலும் நான் நடிக்க ரெடியாகவே இருக்கிறேன்.
தமிழ் சினிமாவை பொருத்தவரை, என்னை பலர் அணுகாததற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. அதாவது, நான் பெரிய நடிகரின் மகளாக இருப்பதால் தான் என்னை, ஒரு நடிகையாக அணுக யோசிக்கிறார்கள். நான் எப்படி நடந்துக்கொள்வேனோ, என்னை வைத்து எப்படி படமாக்குவது, என்றெல்லாம் யோசிக்கிறார்கள் போலிருக்கிறது.
என்னை பொருத்தவரை நான் நடிகையாக ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டால், நடிகையாக மட்டுமே இருப்பேனே தவிர நடிகர் மோகன் பாபுவின் மகளாகவோ அல்லது ஒரு தயாரிப்பாளராகவோ நடந்து கொள்ள மாட்டேன். இதுவரை அப்படித்தான் இருக்கிறேன், இனியும் அப்படித்தான் இருப்பேன்.
நான் பல மொழிகளில் நடித்து வந்தாலும் தமிழ்த் திரைப்படங்கள் மீது எனக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. அதனால், தமிழ்ப் படங்களில் நடிக்க நான் ஆர்வமாக இருக்கிறேன். நல்ல கதையாக இருந்தால், எந்த வேடத்திலும் நடிக்க ரெடி. பெரிய படம், சின்ன படம் என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அதனால் தமிழ் திரையுலகினர் என்னை எந்தவித தயக்கமும் இன்றி தாராளமாக அணுகலாம். நானும் தமிழ்ப் படங்களில், சவாலான வேடங்களில் நடிக்க மிக ஆர்வமாக இருக்கிறேன். என்கிறார்.