தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கடைசியாக லாபம் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்த சாய் தன்ஷிகா இப்போது யோகிடா என்ற தமிழ் படத்திலும், ஷிகாரு என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். ஷிகாரு படத்தை ஹரி குல்கனி இயக்குகிறார். முழுநீள நகைச்சுவை படமான இது வருகிற ஜனவரி 26ம் தேதி வெளிவருகிறது.
இதுகுறித்து தன்ஷிகா கூறியிருப்பதாவது: இது காமெடி படம் என்றாலும் சமூகத்துக்கு நல்ல மெசேஜ் சொல்லும் படம். இதில் நான் தேவிகா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். சாதாரண பெண்ணான தேவிகா சமூக தடைகளை எப்படி உடைத்து முன்னேறுகிறாள் என்பதுதான் படத்தின் கதை. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தபோது அங்கு இன்னொரு தளத்தில் ரஜினி சார் நடித்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது அவரை சந்தித்து ஆசியும், வாழ்த்தும் பெற்றேன். என்றார்.