பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
கொரானோ வைரஸின் அடுத்த கட்ட பாதிப்பான ஒமிக்ரான் அச்சுறுத்தல் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நிலைமைக்கேற்ப முடிவுகளை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியத் திரையுலகின் மையமான மஹாராஷ்டிரா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவிட்டது. இதனால், இரவு நேரக் காட்சிகள் நடைபெற வாய்ப்பில்லை. ஏற்கெனவே அந்த மாநிலத்தில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பான்-இந்தியா படங்களாக அடுத்த மாதம் 'ஆர்ஆர்ஆர், ராதேஷ்யாம்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. ஒமிக்ரான் பரவல் மேலும் அதிகரிக்கப்பட்டால் தென்னிந்திய மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.
50 சதவீத இருக்கைகள், இரவு நேர ஊரடங்கு என வந்தால் தமிழிலும் வெளியாகும் படங்களுக்கு பாதிப்பு ஏற்படும். பொங்கலுக்கு அஜித் நடித்துள்ள 'வலிமை' படம் வெளியாக உள்ளது. இந்த புதிய சிக்கலால் வசூல் குறைய வாய்ப்புள்ளது.
ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் யோசிக்க ஆரம்பித்தால் தியேட்டர்கள் பக்கமும் வர மாட்டார்கள். அடுத்த பத்து நாட்களுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் படங்களின் வெளியீடும் அமையும். பெரிய அளவில் இந்தப் பெரிய படங்களுக்கு வியாபாரம் நடந்துள்ள நிலையில் படங்களை தள்ளி வைப்பார்களா அல்லது வருவது வரட்டும் என படங்களை வெளியிடுவார்களா என்பது சீக்கிரம் தெரிந்துவிடும்.