சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' | இயக்குனர் அவதாரம் எடுக்கும் கென் கருணாஸ்! | 'கூலி' பட டிக்கெட் கட்டணம் ரூ.500: தியேட்டர்களுக்கு தரப்படும் அழுத்தம்! | மிஷ்கின் என்னை பாப்பா என்று அழைப்பார்! : ஸ்ருதிஹாசன் | ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சந்திரபாபு நாயுடு மகன் |
'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு தென்னிந்திய அளவில் பெரிய பட்ஜெட் படங்கள் சில உருவாகி வருகின்றன. பிரபாஸ் நடிக்கும் 'ராதே ஷ்யாம்', ராஜமவுலி இயக்கும் 'ஆர்ஆர்ஆர்', அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா, மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்', ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2', மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் 'மரைக்கார்', தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் 'ஆச்சார்யா' ஆகிய படங்கள் அவற்றில் சில முக்கியமான படங்கள்.
இவற்றில் சில படங்கள் கடந்த வருடமே வந்திருக்க வேண்டியவை. ஆனால், கொரோனாதொற்று காரணமாக அவற்றின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடத்தி முடிக்க முடியாததால் அவை இந்த வருடத்திற்குத் தள்ளிப் போயின. இருந்தாலும், இந்த வருடமும் அந்தப் படங்கள் வெளிவருமா என்பது சந்தேகமாகத்தான் உள்ளது.
மேலே, குறிப்பிட்ட படங்களில் 'மரைக்கார்' படம் மட்டுமே வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. மற்ற படங்களின் படப்பிடிப்புகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. அந்தப் படம் சம்பந்தப்பட்ட சில ஹீரோக்கள் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நலமுடன் திரும்பி வந்தாலும் உடனடியாக படப்பிடிப்பில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை.
அந்தப் படங்கள் அனைத்துமே பல கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் படங்கள். வெளியீட்டில் தாமதம் ஆக ஆக அந்தப் படங்களின் செலவினமும் அதிகமாகி வரும். அதனால், படத் தயாரிப்பாளர்கள் பெரும் சிக்கலை சந்திக்கவும் வாய்ப்புள்ளது.
படம் தயாராகி வெளிவரும் சமயத்தில் வேறு எந்த பிரச்சினையும் இருக்கக் கூடாது. மக்கள் அனைவரும் தியேட்டர்களுக்குத் திரும்பி வந்தால்தான் அவர்கள் செலவழித்த பல கோடி முதலீட்டைத் திரும்பப் பெற முடியும்.