சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் | கதை நாயகியான லிஸி ஆண்டனி | முகமூடி அணிந்து ரசிகர்களிடம் நேரடியாக பட விமர்சனம் கேட்ட அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : கன்னட நாடகத் துறையின் புரட்சியாளர் | பிளாஷ்பேக் : என்ஜினீயர் மோகன், கிரேஸி மோகன் ஆனது எப்படி? |
பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள படம் ரைட்டர். பிராங்க்ளின் ஜேக்கப் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் சமுத்திரகனி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். கடந்த 24-ந்தேதி இப்படம் திரைக்கு வந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் பாராட்டு பெற்று வரும் இந்த படம் குறித்து டைரக்டர் கே.பாக்யராஜூம் ஒரு பாராட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், ரைட்டர் படம் பார்த்தேன். மீண்டும் நாம் முதன்மை இடத்தை தக்கவைக்கக்கூடிய நம்பிக்கை கிடைத்துள்ளது. யாருமே வேடம் போட்டு நடித்ததாக தெரியவில்லை. வாழ்ந்திருக்கிறார்கள். ஒரு காவலரின் உண்மையான வாழ்க்கையில் நுழைந்து பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது.
இந்த படத்தில் முதன்மை ரோலில் நடித்துள்ள சமுத்திரகனி ஹீரோவா? இல்லை இயக்குனர் ஹீரோவா? இல்லை தயாரிப்பாளர் ஹீரோவா? என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது. ஆனால் என்னைப்பொறுத்தவரை தயாரிப்பாளர் பா.ரஞ்சித்தான் பெரிய ஹீரோ. படம் பாருங்கள் நான் சொன்னது உங்களுக்கு புரியும். ரைட்டர் படத்தை பார்த்தவர்கள் சான்சே இல்லை என்று சொன்னார்கள். விமர்சனங்களைப்பார்த்து விட்டு நானும் படத்தை பார்த்தேன். அனைவருக்குமே சான்சே இல்லை என்ற அந்த அனுபவம் கிடைக்கும். இவ்வாறு கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.