தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த 2018ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்தார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வந்தவர் கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வந்தார். கடந்த சில மாதங்களாகவே சமந்தாவின் விவாகரத்து செய்தி பரவிய நிலையில் பின்னர் அதை உறுதி செய்தனர்.
சமந்தா விவாகரத்துக்கு பின் சினிமாவில் தீவிரமாக நடிக்க தொடங்கியுள்ளார். அவர் அடுத்து நடித்துவரும் படம் யசோதா. யசோதா தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஹரி மற்றும் ஹரீஷ் படத்தை இயக்குகின்றனர். இந்தப் படத்தில் சமந்தா நர்சாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதுவரை அவர் நர்சாக நடித்ததில்லை. மிகவும் வலிமையான வேடம் என இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் முடிந்துள்ளது. யசோதா, நாயகி மையத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.