இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
சமந்தா விவாகரத்துக்கு பிறகு ஒரே ஒரு பாடலுக்கு ஆடிய படம் புஷ்பா. 4 மொழிகளில் வெளியான இந்த படம் சில வாரங்களுக்கு முன் ரிலீசாகி வெற்றி பெற்றது. படத்தில் சமந்தா நடனம் ஆடும் ஓ சொல்றியா பாடல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்படி ஒரு நிலையில் இந்த பாடலில் ஆடியது குறித்து தன் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்ட சமந்தா 'நான் நல்லவளாக நடித்திருக்கிறேன், கெட்டவளாக நடித்திருக்கிறேன், ஜாலியாகவும் நடித்திருக்கிறேன். நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும் இருந்திருக்கிறேன். நான் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் என்னுடைய கடின உழைப்பை போட்டிருக்கிறேன். ஆனால், செக்ஸியாக இருப்பது அடுத்தகட்ட கடினமான உழைப்பு, ப்பா, உங்கள் அன்பிற்கு நன்றி' என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த பாடலில் நடமான ஒத்துக்கொண்ட காரணம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சமந்தா 'இது மிகவும் சவாலாக இருந்தது என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த பாடலுக்காக நடிகை சமந்தா ரிகர்சல் செய்த போது எடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.